தூத்துக்குடியில் கனிமொழி - தமிழிசை இடையிலான போட்டி எப்படி? தந்தி டிவி கருத்துக்கணிப்பு


தூத்துக்குடியில் கனிமொழி - தமிழிசை இடையிலான போட்டி எப்படி? தந்தி டிவி கருத்துக்கணிப்பு
x
தினத்தந்தி 19 May 2019 4:18 PM GMT (Updated: 19 May 2019 4:18 PM GMT)

தூத்துக்குடியில் கனிமொழி மற்றும் தமிழிசை இடையிலான போட்டி எப்படியிருக்கும் என்பது தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.


தமிழகத்தில் வேலூர் தவிர்த்து  38 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை தந்தி டிவி வெளியிட்டு வருகிறது. ஒவ்வொரு தொகுதியிலும் பல்வேறு இடங்களில் தேர்தல் அன்று வாக்களித்த மக்களை சந்தித்து, அவர்கள் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கேட்டறிந்து கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.  தென் மாவட்டங்களில் முக்கியமான தொகுதியான தூத்துக்குடியில் திமுக சார்பில் கனிமொழியும், பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தலைவர் தமிழிசையும் போட்டியிட்டனர். பிரசாரத்தின் போது அணல் பறந்த தொகுதிகளில் இதுவும் ஒன்று. இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.

தந்திடிவி அங்கு தேர்தலுக்கு பின்னர் நடத்திய கருத்துக்கணிப்பில் திமுக வேட்பாளர் கனிமொழியே முந்தி செல்கிறார் எனத் தெரிகிறது.  தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு   41-47 சதவீத பேர் வாக்களித்ததாக தெரிவித்துள்ளனர். அதிமுக - பா.ஜனதா கூட்டணிக்கு வாக்களித்ததாக 35-41 சதவீத பேர் தெரிவித்துள்ளனர்.  அமமுகவிற்கு என்று  5-11 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். 


Next Story