தேர்தல் செய்திகள்

சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல் + "||" + BSP leader SC Mishra to ANI: Mayawati ji has no programme or meetings scheduled in Delhi today, she will be in Lucknow. (File pic: Mayawati)

சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்

சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங். தலைவர் ராகுல் காந்தியை இன்று மயாவதி சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தார்.
புதுடெல்லி,

நாடாளுமன்றத்துக்கு 7 கட்டமாக நடந்த தேர்தல் நேற்றுடன் முடிவடைந்து விட்டது. ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாரதீய ஜனதாவுக்கு கூடுதல் இடம் கிடைக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையில், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தி ஆகியோரை இன்று சந்தித்து ஆலோசனை நடத்துவதாக இருந்தது.  இந்த சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து பேசப்படும் என பரவலாக தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இன்று மாயாவதி சந்திக்க மாட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகி எஸ்.சி மிஸ்ரா தெரிவித்துள்ளார். டெல்லியில் வேறு எந்த அரசியல் கட்சி தலைவர்களையும் மாயாவதி இன்று சந்திக்க திட்டமிடவில்லை எனவும், லக்னோவிலே மாயாவதி இருப்பார் என்றும் எஸ்.சி மிஸ்ரா கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. மூழ்கும் நிலையில் காங்கிரஸ் என்ற கப்பலை விட்டுவிட்டு ஓடிய கேப்டன் ராகுல்காந்தி -ஓவைசி விமர்சனம்
மூழ்கும் நிலையில் உள்ள காங்கிரஸ் என்ற கப்பலை விட்டுவிட்டு ஓடிய கேப்டன்தான் ராகுல் காந்தி என்று ஓவைசி விமர்சித்துள்ளார்.
2. ராகுல் காந்தி பிரசாரத்தின் மூலம் பா.ஜனதாவின் வெற்றி உறுதியாகி உள்ளது: யோகி ஆதித்யநாத் கிண்டல்
ராகுல் காந்தி பிரசாரத்தின் மூலம் மராட்டியத்தில் பா.ஜனதாவின் வெற்றி உறுதியாகி உள்ளது என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
3. அவதூறு வழக்கில் ராகுல் காந்தி ஆமதாபாத் கோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றார்
ஆமதாபாத் கோர்ட்டுகளில் நடைபெற்றுவரும் அவதூறு வழக்கில் ராகுல் காந்தி நேற்று ஆஜரானார். இதில் ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
4. நாட்டில் வகுப்புவாத சக்திகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது - மாயாவதி குற்றச்சாட்டு
நாட்டில் வகுப்புவாத சக்திகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டி மாயாவதி டுவிட் செய்து உள்ளார்.
5. மோடி அமைச்சரவையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டால் மகிழ்ச்சியுடன் செயல்படுவேன் : மராட்டிய முதல் மந்திரி
மோடி அமைச்சரவையில் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டால் மகிழ்ச்சியுடன் செயல்படுவேன் என்று மராட்டிய முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.