தேர்தல் செய்திகள்

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவுடன் மாயாவதி சந்திப்பு + "||" + Mayawati meets Akhilesh discuss exit polls projections

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவுடன் மாயாவதி சந்திப்பு

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவுடன் மாயாவதி சந்திப்பு
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவை மாயாவதி சந்தித்து பேசியுள்ளார்.
80 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச மாநிலம், மத்தியில் ஆட்சியமைக்கும் கட்சியை தீர்மானம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது. இங்கு பா.ஜனதாவை வீழ்த்த சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி அமைத்தது, காங்கிரசை கழற்றிவிட்டது. மறுபுறம் காங்கிரஸ் பிரியங்கா காந்தியை களத்தில் இறக்கியது. இதனால் எதிர்க்கட்சிகளின் வாக்கு பிரியும் என்றே பார்க்கப்பட்டது.

இப்போது தேர்தலுக்கு பின்னர் வெளியான கருத்துக்கணிப்புகளில் பா.ஜனதா கூட்டணி 40 தொகுதிகள் வரையில் வெற்றிப்பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது. சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு எதிர்பார்த்த அளவு தொகுதி  கிடைக்குமா? என்ற கேள்வி அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கூட்டணி  சோனியா காந்தி, ராகுல் காந்தி போட்டியிடும் தொகுதிகளை தவிர்த்து 78 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் பா.ஜனதா கூட்டணி 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றிப்பெறும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் கருத்துக்கணிப்பு தொடர்பாக ஆலோசிக்க அகிலேஷ் யாதவை மாயாவதி சந்தித்து பேசியுள்ளார். இருவருக்கும் இடையே நீண்ட நேரம் ஆலோசனை நடைபெற்றுள்ளது. என்ன பேசப்பட்டது என்பது தொடர்பாக தகவல்கள் வெளியாகவில்லை. இருவரையும் ஏற்கனவே சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. நாட்டில் வகுப்புவாத சக்திகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது - மாயாவதி குற்றச்சாட்டு
நாட்டில் வகுப்புவாத சக்திகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று குற்றம் சாட்டி மாயாவதி டுவிட் செய்து உள்ளார்.
2. குப்பைகளில் இருந்து பிளாஸ்டிக் பைகளை சேகரிக்கும் பெண்களை சந்தித்து பேசினார் மோடி
குப்பைகளில் இருந்து நெகிழிப் பைகளை சேகரிக்கும் பெண்களை பிரதமர் மோடி சந்தித்து பேசி அவர்களுக்கு உதவிகரம் நீட்டினார்.
3. அரியானாவில் கூட்டணி: காங்கிரசுடன் மாயாவதி ரகசிய பேச்சுவார்த்தை
அரியானாவில் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரசுடன் மாயாவதி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
4. மோடி தொகுதி பள்ளிக்கூடத்திற்கு மின் கட்டணம் ரூ.618.5 கோடி அதிர்ச்சியில் நிர்வாகம்
உத்தரபிரதேச பள்ளிக்கு இரண்டு மாத மின் கட்டணமாக 618.5 கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
5. பள்ளியில் தலித் மாணவர்களை தனியாக அமரவைத்து மதிய உணவு; மாயாவதி கண்டிப்பு
உ.பி. பள்ளியொன்றில் தலித் மாணவர்களை தனியாக அமரவைத்து மதிய உணவு பரிமாறப்பட்ட விவகாரத்திற்கு மாயாவதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.