தேர்தல் செய்திகள்

கருத்துக் கணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள் + "||" + Exit Polls Just To Discourage You": Priyanka Gandhi To Congress Workers

கருத்துக் கணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்

கருத்துக் கணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி வேண்டுகோள்
கருத்துக் கணிப்பால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று பிரியங்கா காந்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி,

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெரும்பாலும் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்றே தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான 272 இடங்களைவிட அதிகமாக, 300 தொகுதிகள் வரை வெற்றிபெறும் என்றும் சில கணிப்புகள் தெரிவித்தன.

இந்த நிலையில், கருத்துக் கணிப்புகளால் தொண்டர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம் என்று உத்தரபிரதேச கிழக்கு பிராந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில், பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது:-  கருத்துக்கணிப்பால் யாரும் சோர்வடைய வேண்டாம். நம்பிக்கையும் இழக்க கூடாது. நமது கடின உழைப்பு வெற்றியை தரும். நமது உழைப்பு வீண் போகாது. வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு வெளியேயும், ஓட்டு எண்ணும் மையத்திற்குள்ளும் நமது முகவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. 2022 உ.பி. தேர்தலுக்காக அடிமட்ட அளவில் பணியாற்ற பிரியங்கா காந்தி திட்டம்
உத்தரபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் முயற்சியில் பிரியங்கா காந்தி புதிய திட்டத்தை தீட்டியுள்ளார்.
2. உ.பி. தேர்தலில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும் காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை
2022–ம் ஆண்டு நடக்கும் உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பிரியங்காவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
3. மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம், பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் - பிரியங்கா காந்தி
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம், பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
4. தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்
தமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் தேர்தலுக்கு பிறகான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. #MakkalYaarPakkam #ElectionsWithThanthiTV
5. பா.ஜனதா ஆட்சியிலிருந்து சென்றுவிடும் என்பது தெளிவாக தெரிகிறது - பிரியங்கா காந்தி
பா.ஜனதா ஆட்சியிலிருந்து சென்றுவிடும் என்பது தெளிவாக தெரிகிறது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.