தேர்தல் செய்திகள்

எதிர்கட்சிகள் விமர்சனங்களை கண்டுகொள்ளாத பிரணாப் முகர்ஜி : ”மிகச்சிறந்த தேர்தல்” என தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு + "||" + Amid Opposition Uproar, Pranab Mukherjee Praises "Perfect" Elections

எதிர்கட்சிகள் விமர்சனங்களை கண்டுகொள்ளாத பிரணாப் முகர்ஜி : ”மிகச்சிறந்த தேர்தல்” என தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு

எதிர்கட்சிகள் விமர்சனங்களை கண்டுகொள்ளாத பிரணாப் முகர்ஜி : ”மிகச்சிறந்த தேர்தல்” என தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மக்களவை தேர்தலை மிகச் சிறப்பாக நடத்தி முடித்ததற்கு தேர்தல் ஆணையத்துக்குப் பாராட்டுகள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி உட்பட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளையும் நடுநிலைத்தன்மை குறித்தும் கேள்விக்கு உள்ளாக்கி வருகின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் கமிஷனை நேரடியாக சாடினார். இந்த சூழலில், தேர்தலை சிறப்பாக நடத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாரட்டு தெரிவித்துள்ளார். 

பிரணாப் முகர்ஜி கூறியிருப்பதாவது:- “ஓர்  அமைப்பை பலப்படுத்த வேண்டும் என்று நாம் நினைத்தால், இந்த நாட்டில் அந்த அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டு வருவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

நாட்டில் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளது என்றால், அதற்கு காரணம் தேர்தல்களை ஒழுங்காக நடத்திய தேர்தல் ஆணையத்தினால்தான். தேர்தல் ஆணையர் சுகுமார் சென் முதல் தற்போது இருக்கும் தேர்தல் ஆணையர் வரை அனைவரும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களை நாம் விமர்சிக்க முடியாது.

இந்த முறையும் தேர்தல்கள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. அரசு அமைப்புகள் அனைத்தும் நன்றாகத்தான் உள்ளன. பல ஆண்டுகளாக இந்த அரசு அமைப்புகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. மோசமான பணியாளர் மட்டுமே தனது கருவி குறித்து வாதம் செய்வார். ஒரு நல்ல பணியாளர், அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று நன்கு அறிந்து இருப்பார் என்ற கூற்றையே நான் நம்புகிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாங்குநேரியில் பணப் பட்டுவாடா புகார் -அறிக்கை கேட்டது தேர்தல் ஆணையம்
நாங்குநேரியில் நடந்த பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கேட்கப்பட்டுள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
2. இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிப்பு
இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் அக்.7 ஆம் தேதி தொடங்க உள்ளது.
3. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று வழங்கப்பட்டது.
4. பிரணாப் முகர்ஜிக்கு “பாரத ரத்னா விருது” ஆகஸ்ட் 8-ம் தேதி வழங்கப்படுகிறது
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு ஆகஸ்ட் மாதம் 8 -ம் தேதி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது.
5. வேலூரில் ரூ.2 கோடியே 38 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது - சத்யபிரத சாஹூ
வேலூரில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச்சென்றதாக ரூ.2 கோடியே 38 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியுள்ளார்.