தேர்தல் செய்திகள்

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ + "||" + Counting of votes Will be released soon Tamil Nadu Chief Electoral Officer Satyabrata Sahoo

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் -தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறி உள்ளார்.
சென்னை,

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

8 மணிக்கே தபால் வாக்குகளுடன் மின்னணு இயந்திர வாக்குகளையும் எண்ணும் பணி தொடங்கும். மின்னணு இயந்திரங்களில் எண்ணப்பட்ட பின்னரே ஒப்புகைச்சீட்டுகள் எண்ணப்படும்.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட 88 அதிகாரிகள் வந்துள்ளனர். வாக்கு எண்ணிக்கை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். 19 கம்பெனி  துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். 17 ஆயிரத்திற்கும்  அதிகமானோர் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். வாக்கு  எண்ணும் பணியில் 36 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்தப்படுவார்கள். 1,520 துணை ராணுவப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவுகள் உடனுக்குடன் வெளியிடப்படும். வெப் காமிரா மூலம் வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படும். அதிகபட்சமாக திருவள்ளூரில் 34 சுற்றுகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 19 சுற்றுகளாகவும்  வாக்குகள் எண்ணப்படும். ஒரு சுற்று முடிய 30 நிமிடமாகும் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக ராகுல் காந்தி விருப்பமா?
தோல்விக்கு பொறுப்பேற்று காங். தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வீர்களா? என்ற கேள்விக்கு ராகுல்காந்தி பதில் அளித்தார்.
2. 2014 மற்றும் 2019 தமிழகத்தின் தனித்துவமான தேர்தல் முடிவுகள்
தற்போது திமுக 35 இடங்களில் முன்னணியில் உள்ளது. அதிமுக கூட்டணி 3 இடங்களில் முன்னணியில் உள்ளது.
3. கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் -எல்.கே.சுதீஷ்
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் என தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.
4. தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்த இருந்த ஆலோசனை ரத்து
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு உள்பட 10 மாநில அதிகாரிகளுடன் நடத்த இருந்த ஆலோசனை ரத்து செய்யப்பட்டது.
5. தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் கூட்டத்தில் முடிவு
தேர்தல் ஆணைய கூட்டங்களில் பங்கு பெறும் ஆணையர்களின் அனைத்து கருத்துகளும் பதிவு செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.