தேர்தல் செய்திகள்

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதமாகும் -தேர்தல் ஆணையம் + "||" + The delay in announcing election results election commission of india

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதமாகும் -தேர்தல் ஆணையம்

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் கால தாமதமாகும் -தேர்தல் ஆணையம்
மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் 5 மணி முதல் 6 மணி நேரம் வரை தாமதம் ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

ஏப்ரல் 18-ம் தேதி துவங்கிய  மக்களவை தேர்தல், 7 கட்டங்களாக நடத்தப்பட்டு மே 19-ம் தேதி நிறைவடைந்தது. மக்களவை தேர்தல் 4 மாநில சட்டசபை தேர்தல், தமிழகத்தில் 22 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் நாளை (மே 23) எண்ணப்பட உள்ளன.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின் படி,

விவிபேட் ஒப்புகைச்சீட்டுகளை வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குடன் சரிபார்க்க அவகாசம் தேவைப்படுகிறது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 5 விவிபேட் இயந்திரங்களின் ஒப்புகைச்சீட்டுகள் சரிபார்க்கப்படுகின்றன. 

இதனால் மக்களவை தேர்தல் முடிவை அறிவிப்பதில் 5 மணி முதல் 6 மணி  நேரம் வரை கால தாமதம் ஏற்படும். தபால் ஓட்டுகளை எண்ணி முடிப்பதற்கும் கூடுதல் அவகாசம் தேவைப்படுவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: சித்தராமையா குற்றச்சாட்டு
15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருப்பதன் மூலம் மத்திய அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
2. தேர்தலுக்காக இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய கோரி வழக்கு, தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தேர்தலுக்காக இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல் விவரங்களை வெளியிட முடியாது - தேர்தல் ஆணையம்
பிரதமர் மோடியின் தேர்தல் நடத்தை விதிமீறல் விவரங்களை வெளியிட முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
4. தேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவாலாக உள்ளது- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
தேர்தல்களின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவாலாக உள்ளது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.
5. எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே? தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும்; டி.டி.வி. தினகரன்
எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டுகள் எங்கே? தேர்தல் ஆணையம் உரிய பதிலை கூற வேண்டும் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.