கழுத்தின்மீது கத்தி உள்ளது: தேசிய கட்சி அந்தஸ்தை தக்க வைக்குமா, இடதுசாரி கட்சிகள்?

தேசிய கட்சி என்னும் அந்தஸ்தை இடதுசாரி கட்சிகள் தக்க வைக்குமா என்பது இன்று நாடாளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிவின்போது தெரியும்.
கோழிக்கோடு,
நமது நாட்டில் தற்போது காங்கிரஸ், பாரதீய ஜனதா, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய 7 தேசிய கட்சிகள் உள்ளன.
இந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஆகிய இரு இடதுசாரி கட்சிகள் தேசிய கட்சிக்கான அந்தஸ்தை தக்க வைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக ஒரு கட்சி தேசிய கட்சி அந்தஸ்தை பெறுவதற்கான தகுதியை 1968-ம் ஆண்டின், தேர்தல் சின்னங்கள் (முன்பதிவு, ஒதுக்கீடு) ஒழுங்குமுறை விதிமுறைகள் தீர்மானிக்கின்றன. அவை:-
* நாடாளுமன்ற தேர்தலில் 3 மாநிலங்களில் இருந்து 2 சதவீத தொகுதிகளை, அதாவது 11 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.
* நாடாளுமன்ற தேர்தல் அல்லது சட்டசபை தேர்தலில் 4 மாநிலங்களில் 6 சதவீத ஓட்டுகளை பெறுவதோடு, 4 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
* 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் ஒரு கட்சி மாநில கட்சிக்கான அங்கீகாரத்தை பெற்றிருக்க வேண்டும்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள், மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என கூறுகின்றன.
இடதுசாரி கட்சிகளைப் பொறுத்தமட்டில் கேரள மாநிலத்தில் மட்டுமே கொஞ்சம் பலத்துடன் உள்ளன.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிதான் அமோக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இந்த கருத்துக்கணிப்புகள் பலித்து விட்டால், இடதுசாரிக்கட்சிகள் எத்தனை இடத்தை கைப்பற்றும் என்பது மட்டுமல்ல, அதன் தேசிய கட்சி அந்தஸ்தும் கேள்விக்குறியாகி விடும்.
தேர்தலுக்கு முந்தைய நிலவரமும் சரி, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் சரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 4 இடங்களுக்கு அதிகமாக வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றே காட்டுகின்றன.
இந்தக் கட்சி தமிழ்நாட்டில் 1 அல்லது 2 இடங்களில், மேற்கு வங்காளத்திலும் 1 அல்லது 2 இடங்களில்தான் வெற்றி பெறக்கூடும். ஆக, தேசிய கட்சி அந்தஸ்து பெற 11 இடங்களை கைப்பற்ற வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ள இடங்களில் 4 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. எனவே அந்தக் கட்சி 11 இடங்களில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை எனறே சொல்லி விடலாம்.
எனவே இவ்விரு கட்சிகளின் கழுத்தில் கத்தி வைத்ததுபோல, அவை தேசிய கட்சிக்கான அந்தஸ்தை இழக்கிற அபாயம் உள்ளது. இது இன்று நாடாளுமன்ற தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் தெளிவாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story