தேர்தல் செய்திகள்

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. கூட்டணி 7 இடங்களில் முன்னிலை + "||" + Lok Sabha elections in Tamil Nadu; DMK coalition is leading in 7 places in the counting

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. கூட்டணி 7 இடங்களில் முன்னிலை

தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. கூட்டணி 7 இடங்களில் முன்னிலை
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. கூட்டணி 7 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.
சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது.  இதில் தமிழகத்தில் வேலூர் தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவை கடந்த ஏப்ரல் 18ந்தேதி நடந்தது.  இவற்றில் 72 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

இறுதி கட்ட தேர்தல் கடந்த 19ந்தேதி நடந்தது.  இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கி நடந்து வருகிறது.  முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் வேலூர் தவிர்த்து நடந்து முடிந்த 38 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க. கூட்டணி 7 இடங்களில் முன்னிலை வகிக்கின்றது.

இவற்றில், சென்னை வடக்கு தொகுதியில் டாக்டர். கலாநிதி வீராசாமி, காஞ்சீபுரம் தொகுதியில் செல்வம், நாமக்கல் தொகுதியில் சின்ராஜ், நீலகிரி தொகுதியில் ஏ. ராஜா, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் பாலு, தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி, திருவண்ணாமலை தொகுதியில் சி.என். அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...