தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி


தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி
x
தினத்தந்தி 23 May 2019 6:18 AM GMT (Updated: 23 May 2019 6:18 AM GMT)

தர்மபுரியில் அன்புமணி ராமதாஸ் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னணி வகிக்கிறார்.

தர்மபுரி,

தமிழகத்தை பொறுத்தவரை திமுக 37 இடங்களில் முன்னிலை வகித்து  வருகிறது. அதிமுக கூட்டணி 3 இடங்களில் மட்டுமே முன்னணி வகிக்கிறது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், அதிமுக பெருவாரியாக வெற்றி பெற்ற போதும், தர்மபுரி தொகுதியில் அன்புமணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மற்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் பின்தங்கிய நிலையில், அன்புமணி முன்னிலை வகித்து வருகிறார். கடந்த தேர்தலிலும் அன்புமணி மட்டுமே வெற்றி பெற்றார். இப்போதும் அவர் மட்டுமே முன்னிலை இருக்கிறார்.
 
தற்போதைய நிலவரப்படி அன்புமணி ராமதாஸ் 65,910 வாக்குகள் பெற்று  உள்ளார். திமுக வேட்பாளர் 60,203 வாக்குகள் பெற்று உள்ளார்.

Next Story