தேர்தல் செய்திகள்

மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக : நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகம் + "||" + Prime Minister Modi again, BJP powers another jumbo win for alliance

மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக : நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகம்

மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக : நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகம்
மாபெரும் வெற்றியை நோக்கி பாஜக சென்று கொண்டிருப்பதால், நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
புதுடெல்லி,

பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.  தேர்தலுக்கு பிந்தைய  கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தது. இந்த கருத்துக் கணிப்புகளை உறுதி செய்யும் வகையில், தற்போது பாஜக கூட்டணி  பெருவாரியான தொகுதிகளில் முந்துகிறது.  தற்போதைய நிலவரப்படி, தேசிய ஜனநாயக கூட்டணி 340 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 92 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்த முன்னிலை நிலவரத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டு சில தொகுதிகள் குறைந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை பாஜக கூட்டணி பெற்றுவிடும் என தெரிகிறது. தற்போதைய முன்னிலை நிலவரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பாஜக கூட்டணிக்கு சிக்கல் உருவாகும்.

அதேசமயம் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம், அவர்களின் கூட்டணியில் இடம்பெறாத மற்ற கட்சிகளும் கிட்டத்தட்ட 110 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. பாஜகவுக்கு சற்று சறுக்கல் ஏற்படும் பட்சத்தில், இந்த கட்சிகளின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனினும் தற்போதைய சூழலில், பாஜக வெற்றியை மிக அருகில் எட்டி விட்டதாக எண்ணத்தோன்றுகிறது. இதனால், நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் அமித்ஷா
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் முதல் முறையாக இடம் பெற்றுள்ள அமித்ஷா, உள்துறை அமைச்சராக இன்று தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
2. உலகைச் சுற்றி...
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.
3. பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை: பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
பாஜக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
4. உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கிய 13 எம்.எல்.ஏ.க்கள் - இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு
உத்தரபிரதேசத்தில் நாடாளுமன்ற தேர்தலில் 13 எம்.எல்.ஏ.க்கள் களமிறங்கியதால், இடைத்தேர்தலுக்கு வாய்ப்பு ஏற்படலாம் என தெரிகிறது.
5. பாஜகவில் என்னை கடிந்து கொள்ளும் ஒரே தலைவர் இவர்தான்: சுமித்ரா மகாஜன் குறித்து மோடி பேச்சு
பாஜகவில் என்னை கடிந்து கொள்ளும் ஒரே தலைவர் சுமித்ரா மகாஜன் தான் என்று பிரதமர் மோடி பேசினார்.