தேர்தல் செய்திகள்

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 21,861 ஓட்டுகளை அள்ளிய நோட்டா 6-வது இடத்தை பிடித்தது + "||" + Tirupur parliamentary constituency Nota, which has 21,861 votes 6th place

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 21,861 ஓட்டுகளை அள்ளிய நோட்டா 6-வது இடத்தை பிடித்தது

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் 21,861 ஓட்டுகளை அள்ளிய நோட்டா 6-வது இடத்தை பிடித்தது
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லாத வாக்காளர்கள் நோட்டாவிற்கு வாக்களிக்கும் வாய்ப்பு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களிலும் இடம் பெற்று இருந்தது.
திருப்பூர்,

திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியை பொருத்தவரை அ.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மக்கள் நீதிமய்யம், அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட 12 பேர் போட்டி போட்டனர். இதில் கே.சுப்பராயன் (இந்திய கம்யூனிஸ்டு)- 5,08,725 வாக்குகளும், எம்.எஸ்.எம். ஆனந்தன் (அ.தி.மு.க.) - 4,15,357 வாக்குகளும் பெற்றனர்.


இந்த தொகுதியில் நோட்டாவிற்கு பெரும்பான்மையான வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்திரகுமார் 64,657 வாக்குகளும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செல்வம் 43,816 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகநாதா 42,189 வாக்குகளும் பெற்று அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளனர். அதை தொடர்ந்து 6-வதாக நோட்டாவில் 21,861 வாக்குகள் பதிவாகி உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் மாவட்டத்தில் குளங்களை சீரமைக்கும் பணிக்காக தனி அலுவலகம் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
திருப்பூர் மாவட்டத்தில் குளங்களை சீரமைக்கும் பணிக்காக தனி அலுவலகம் கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கப்பட உள்ளதாக கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறினார்.
2. திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல்
திருப்பூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று நடந்தது.
3. வாலிபரை மது பாட்டிலால் தாக்கி செல்போன்கள் பறிப்பு - 4 பேர் கும்பல் கைவரிசை
திருப்பூரில் பட்டப்பகலில் வாலிபரை 4 பேர் கொண்ட கும்பல் மது பாட்டிலால் தாக்கி பணம் மற்றும் செல்போன்களை துணிகரமாக பறித்து சென்றது.
4. திருப்பூர் ரெயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் வாகனங்களை அகற்ற வேண்டும்; மாநகர போலீசாருக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோரிக்கை
திருப்பூர் ரெயில்நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீசாருக்கு ரெயில்வே பாதுகாப்பு படையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5. திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியானான். அவனுடைய சாவில் சந்தேகம் இருப்பதாக போலீஸ் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர்.