தேர்தல் செய்திகள்

அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் எதிர்க்க முடியாது: சிவசேனா கூறுகிறது + "||" + Election Results 2019: "Nobody Can Counter Modi For Next 25 Years" - Shiv Sena On Big BJP Win

அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் எதிர்க்க முடியாது: சிவசேனா கூறுகிறது

அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் எதிர்க்க முடியாது: சிவசேனா கூறுகிறது
அடுத்த 25 ஆண்டுகளுக்கு மோடியை யாராலும் எதிர்க்க முடியாது என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
மும்பை, 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை தொடர்ந்து வசைபாடி வந்த சிவசேனா கட்சி தேர்தல் நெருங்கியதும் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்தது. இந்த நிலையில் நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் பா.ஜனதா கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. இதுகுறித்து கூட்டணி கட்சியான சிவசேனாவின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியதாவது:-

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை வைத்து பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய மாய எதிர்ப்பலைக்கு மக்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். தற்போது முழு நாடும் மோடி மயமாக மாறியுள்ளது. மோடியை யாரும் அசைக்க முடியாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் அடுத்த 25 ஆண்டுகளுக்கு யாரும் மோடியை எதிர்க்க முடியாது என்பதை கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மோடி-ஜின்பிங் சந்திப்புக்கு பின் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு நேற்று 2-வது நாளாக சிறப்புற நடந்தேறியது.
2. தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
”தமிழர் பாரம்பரிய உடை அணிந்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்” என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
3. "கோ பேக் மோடி" டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தான் குழுக்கள்
கோ பேக் மோடி டிரெண்டிங் பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது.
4. சென்னை கிண்டியில் இருந்து கோவளம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.
மோடியை 2-வது நாளாக சந்திக்க சீன அதிபர் ஜின்பிங் கோவளத்திற்கு தனது பிரத்யேக காரில் புறப்பட்டுச் சென்றார்.
5. சற்று நேரத்தில் பேச்சுவார்த்தை: எல்லைப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு..!
இன்று மோடி - சீன அதிபர் சந்திப்பில் எல்லைப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து பேச வாய்ப்பு உளளது.

ஆசிரியரின் தேர்வுகள்...