தேர்தல் செய்திகள்

மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்: கனடா பிரதமர் வாழ்த்து + "||" + Canadian PM Justin Trudeau:On behalf of Govt of Canada,I congratulate PM Narendra Modi

மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்: கனடா பிரதமர் வாழ்த்து

மோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன்: கனடா பிரதமர் வாழ்த்து
தேர்தலில் மகத்தான வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு கனடா பிரதமர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பிரதமர் மோடி 2-முறையாக ஆட்சி அமைக்க உள்ளார்.

வெற்றி பெற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் சிறிசேனா உட்பட பல்வேறு நாட்டுத் தலைவர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ-வும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில், மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கவுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு கனடா அரசின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கனடா-இந்தியர்களின் வாழ்க்கை மேம்பாடு, கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீடு, சூழலியல் மாற்றம் போன்ற துறைகளில் அவருடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம்: பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது குறித்து விவாதிக்க டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடக்கிறது. பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.
2. எண்ணிக்கை பற்றி கவலைப்பட வேண்டாம், எதிர்க்கட்சிகளின் ஒவ்வொரு கருத்தும் மதிப்பு உடையது - பிரதமர் மோடி
எதிர்க்கட்சிகள் தங்கள் எண்ணிக்கை பற்றி கவலைப்பட வேண்டாம், அவர்களது ஒவ்வொரு கருத்தும் மதிப்புடையது என்று மக்களவை கூட்டம் தொடங்கும் முன்பு பிரதமர் மோடி கூறினார்.
3. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ டெல்லியில் 19-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு மோடி அழைப்பு
நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி விவாதிக்க டெல்லியில் 19-ந் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
4. குடிக்க தண்ணீரில்லை, 3 மகள்களுடன் தற்கொலை செய்கிறேன் பிரதமர் மோடிக்கு விவசாயி கடிதம்
குடிப்பதற்கு நல்ல தண்ணீர் இல்லாத நிலையில் 3 மகள்களுடன் தற்கொலை செய்ய உள்ளேன், அனுமதியுங்கள் என விவசாயி ஒருவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
5. ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் -பிரதமர் மோடி
ஏற்றுமதியை அதிகரிப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும் என நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.