தேர்தல் செய்திகள்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடா? அமைச்சர் காமராஜ் பதில் + "||" + Edappadi Palaniswamy, Between O Panneerselvam Feedback is different Minister Kamaraj answered

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடா? அமைச்சர் காமராஜ் பதில்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடா? அமைச்சர் காமராஜ் பதில்
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா? என்ற கேள்விக்கு அமைச்சர் காமராஜ் பதில் அளித்துள்ளார்.
திருவாரூர்,

தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நன்னிலத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது ஊர், ஊராக சென்று ராகுல்காந்தி பிரதமர் ஆவார், உடனடியாக அ.தி.மு.க. ஆட்சி அகற்றப்படும் என்றார். இந்த இரண்டிலும் அவர் தோற்று விட்டார். அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற முடியாது. அவர் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்தார்.


தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி தொடர்கிறது. இந்தியாவில் மோடி தலைமையிலான ஆட்சி தொடர்கிறது. எடப்பாடி பழனிசாமி வலியான முதல்-அமைச்சர் என்பதை விரைவில் நிருபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாக கூறப்படுகிறதே? என கேட்டதற்கு, “எந்த கருத்து வேறுபாடும் கிடையாது. இரண்டு பேரும் இணைந்து செயல்படுகின்றனர்” என்றார். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நெடுஞ்சாலை துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை
நெடுஞ்சாலை துறை மானியக் கோரிக்கை தொடர்பாக துறை சார்ந்த அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
2. ரூ.125 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருவானைக்காவல் மேம்பாலத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார்
ரூ.125 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட திருவானைக்காவல் மேம்பாலத்தை எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைக்கிறார். அணுகுசாலை பணிகளை 4 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
3. ஆதிதிராவிடர், பழங்குடியினர் விடுதி கட்டிடங்கள் : எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்
ரூ.47 கோடியில் கட்டப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான விடுதிகள் உள்ளிட்ட கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
4. அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 70 லட்சம் பேருக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ புதிய திட்டத்தை எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 70 லட்சம் பேருக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்கும் புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார்.
5. தமிழக கவர்னருடன் எடப்பாடி பழனிசாமி ‘திடீர்’ சந்திப்பு : புதிய தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. நியமனம் பற்றி ஆலோசனை
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு சென்று சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

ஆசிரியரின் தேர்வுகள்...