தேர்தல் செய்திகள்

96-வது பிறந்த நாள்: கருணாநிதி சிலைக்கு நாளை மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார் + "||" + 96th birthday To the idol of Karunanidhi Tomorrow is MK Stalin Dressed in the flowers

96-வது பிறந்த நாள்: கருணாநிதி சிலைக்கு நாளை மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்

96-வது பிறந்த நாள்: கருணாநிதி சிலைக்கு நாளை மு.க.ஸ்டாலின் மாலை அணிவிக்கிறார்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு காலை 7 மணியளவில் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலையில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
சென்னை,

சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக வரலாற்றில் தமக்கென்று சில பக்கங்களை ஒதுக்கிக்கொண்ட தலைவர் கருணாநிதியின் 96-வது பிறந்த நாளான 3-6-2019 அன்று (நாளை) சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது சிலைக்கு காலை 7 மணியளவில் தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலையில் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.


அப்போது, தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் - இன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள், தலைமை செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், மாநகராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, தொழிலாளர் அணி, வழக்கறிஞர் அணி, தொண்டர் அணி, மீனவர் அணி, ஆதிதிராவிடர் நலக்குழு, கலை - இலக்கிய பகுத்தறிவு பேரவை, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு, வர்த்தகர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆகிய அனைத்து அணியினரும் மற்றும் கட்சித் தொண்டர் களும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...