தேர்தல் செய்திகள்

வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை + "||" + Vellore Lok Sabha election result live updates: Counting under way

வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை

வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை
வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
வேலூர்,

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

முதல் சுற்றுக்கள் முடிவில் ,  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 483 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.  அதிமுக - 21,660, திமுக - 21,177, நாம் தமிழர் - 400 வாக்குகள் பெற்றுள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை
வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
2. வேலூர் மக்களவை தேர்தல்: 72% வாக்குகள் பதிவு - தேர்தல் அதிகாரி அறிவிப்பு
வேலூர் மக்களவை தேர்தலில் மொத்தம் 72 சதவீகிதம் வாக்கு பதிவாகி உள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
3. வேலூர் மக்களவை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு
வேலூர் மக்களவை தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
4. வேலூர் மக்களவை தேர்தல்: மாலை 5 மணி நிலவரப்படி 62.04 % வாக்குப்பதிவு
வேலூர் மக்களவை தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 62.04 சதவிகிதம் வாக்குப்பதிவாகி உள்ளது.
5. வேலூர் மக்களவை தேர்தல்: பிற்பகல் 3 மணி வரை 52.32 சதவீத வாக்குகள் பதிவு
வேலூர் மக்களவை தொகுதியில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 52.32 சதவிகிதம் வாக்குப்பதிவாகி உள்ளது.