தேர்தல் செய்திகள்

வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை + "||" + Vellore Lok Sabha election result live updates: Counting under way, kathir anand leading

வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை

வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை
வேலூர் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக முன்னிலை வகிக்கிறது.
வேலூர்,

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்.  

தொடர்ந்து சுற்றுக்கள் வாரியாக வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில்,  தற்போது அதிமுகவை திமுக பின்னுக்கு தள்ளியுள்ளது. திமுக வேட்பாளர் 34,052 வாக்குகளும் அதிமுக கூட்டணி வேட்பாளர் 31,194 வாக்குகளும் பெற்றுள்ளனர். 2,858வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.  நாம் தமிழர் கட்சி 400 வாக்குகளை பெற்றுள்ளது.