தேர்தல் செய்திகள்

வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை + "||" + Vellore Lok Sabha Election: AIADMK Alliance candidate AC Shanmugam leads by 11220 votes

வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

வேலூர் மக்களவை தேர்தல் :  அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220  வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
வேலூர் மக்களவை தேர்தல் : அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை
வேலூர், 

வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் இவர்கள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர். 

ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.  காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்றது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை பெற்று இருந்தார்.  முதல் சுற்று நிலவரத்தில், அதிமுகவை திமுக பின்னுக்கு தள்ளியது. திமுக வேட்பாளர் 34,052 வாக்குகளும் அதிமுக கூட்டணி வேட்பாளர் 31,194 வாக்குகளும் பெற்று இருந்தார்.  

தொடர்ந்து வாக்குகள் முன்னிலை விவரம் மாறிக்கொண்டே இருப்பதால், வேலூரில் அதிமுக திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தற்போதைய நிலவரப்படி  ஏசி சண்முகம் 178138  வாக்குகளும், கதிர் ஆனந்த  166918  வாக்குகளும்  நாம் தமிழர் கட்சி தீப லட்சுமி 8969  வாக்குகளும் பெற்று உள்ளனர். 

திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை விட, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 11220 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. நாளை மாலை 5 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, சென்னையில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
2. அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியது
அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு விநியோகம் தொடங்கியது. இன்றும், நாளையும் விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்படவுள்ளன.
3. 'அதிமுக ஏழைகளின் கட்சி; திமுக கோடீஸ்வர கட்சி!'- அமைச்சர் ஜெயக்குமார்
திமுகவில் மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயித்தது குறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயக்குமார் 'அதிமுக ஏழைகளின் கட்சி, திமுக கோடீஸ்வர கட்சி' என கூறினார்.
4. அமமுக அதிருப்தியாளர்களுடன் அதிமுகவில் இணைகிறார் புகழேந்தி
அமமுக அதிருப்தியாளர்கள் புகழேந்தி தலைமையில் அதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளனர்.
5. நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அமோக வெற்றி முழு விவரம்
நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் அமோக வெற்றி முழு விவரம் வெளியாகி உள்ளது.