மின்சாரம் தாக்கி கல்லூாி மாணவன் பலி


மின்சாரம் தாக்கி   கல்லூாி மாணவன் பலி
x

மின்சாரம் தாக்கி கல்லூாி மாணவன் பலியானார்.

தாவணகெரே: கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் மலேபென்னூர் அருகே தேவனகட்டே கிராமத்தை சேர்ந்தவர் அண்ணப்பா. இவரது மனைவி அனுசியம்மா. இவர்களது மகன் சாகர்(வயது 18). இவர், அதேப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படிந்து வந்தார். இவர் நேற்று வீட்டிற்கு தனது உறவினரான ராமப்பா என்பவருடம் சேர்ந்து பெயிண்ட்அடித்து கொண்டிருந்தார்.

அப்போது வீட்டு சுவரின் மேல்பகுதியில் சென்ற மின்வயரை, சாகர் எதிர்பாராதவிதமாக உரசியுள்ளார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி சாகர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாகரை காப்பாற்ற முயன்ற ராமப்பா காயமடைந்தார். இதுகுறித்து மலேபென்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story