கர்நாடகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்- வானிலை மையம் தகவல்
It will rain in Karnataka for 2 days
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் இன்றும்(புதன்கிழமை), நாளையும்(வியாழக்கிழமை) 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் சாதாரண மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட கர்நாடக பகுதிகளில் மழை பெய்யாது. அங்கு வானம் மேகமூட்டம் இன்றி பளிச்சென்று காணப்படும். தென்கர்நாடக பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கர்நாடகத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்துள்ளது. பனம்பூரில் 40 மில்லி மீட்டர், தேவனஹள்ளியில் 30, பெல்தங்கடி, தர்மஸ்தலாவில் தலா 20, பெங்களூரு சர்வதேச விமான நிலையம், தொட்டப்பள்ளாபுரா உள்ளிட்ட பகுதிகளில் தலா 10 மில்லி மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது.
இவ்வாறு வானிலை மையம் கூறியுள்ளது.
Related Tags :
Next Story