ராஜஸ்தானில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ.1¼ கோடி கொள்ளை


ராஜஸ்தானில் துப்பாக்கி முனையில் வங்கியில் ரூ.1¼ கோடி கொள்ளை
x

கொள்ளை போனதில் ரூ.70 லட்சம் ரொக்க பணமும், ரூ.40 முதல் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகையும் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. நேற்று இந்த வங்கி வழக்கம்போல செயல்பட்டுக்கொண்டிருந்தது. அப்போது 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் ஆயுதங்களுடன் வங்கி அலுவலகத்துக்குள் புகுந்தனர்.

பின்னர் அங்கிருந்தவர்களை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை காட்டி மிரட்டி வங்கியில் இருந்த பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளை போனதில் ரூ.70 லட்சம் ரொக்க பணமும், ரூ.40 முதல் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகையும் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். பட்டப்பகலில் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.


Next Story