அசாமில் ஒரே நாளில் 1 கோடி மரக்கன்றுகள்... முதல்-மந்திரி அறிவிப்பு


அசாமில் ஒரே நாளில் 1 கோடி மரக்கன்றுகள்... முதல்-மந்திரி அறிவிப்பு
x

அசாமில் வர்த்தக மதிப்புடைய 1 கோடி மரக்கன்றுகள் ஒரே நாளில் நடப்படும் என முதல்-மந்திரி பிஸ்வா சர்மா கூறியுள்ளார்.

கவுகாத்தி,

அசாமில் மூன்று நோக்கங்களை கொண்ட திட்ட நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கான ஆலோசனைகளை முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா துணை ஆணையாளர்களுடன் நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதன்படி, வர்த்தக மர உற்பத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை மேம்படுத்துவதற்காக அசாம் முழுவதும் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்படும்.

விளையாட்டு மற்றும் கலாசாரம் ஆகிய துறைகளில் திறமைகளை கண்டறிவதற்காக கேல் மஹரான் மற்றும் சன்ஸ்கிருதிக் மஹாசங்ராம் ஆகிய திட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது.

இவற்றில், வர்த்தக மதிப்புடைய 1 கோடி மரக்கன்றுகள் ஒரே நாளில் நடப்படும் என்றும் இதற்காக சுய உதவி குழு உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், ஆஷா பணியாளர்கள், பட்டாலியன்கள் உள்ளிட்ட காவல் துறையினர், தேயிலை தோட்டங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்டவை இந்த பணிகளை செய்வதற்கான குழுக்களாக கண்டறியப்பட்டு உள்ளன.

இந்த பணியில் மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மத நிறுவனங்கள் தன்னார்வத்துடன் பங்கேற்க துணை காவல் ஆணையாளர்கள் ஊக்குவிக்க வேண்டும். இது ஒரு பேரியக்கம் போல் மாற வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டு உள்ளார்.


Next Story