வரதட்சணை கொடுமை: திருமணமான 3 மாதத்தில் 1½ மாத கர்ப்பிணி மர்ம சாவு


வரதட்சணை கொடுமை: திருமணமான 3 மாதத்தில் 1½ மாத கர்ப்பிணி மர்ம சாவு
x

தாவணகெரேவில், திருமணமான 3 மாதத்தில் 1½ மாத கர்ப்பிணி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது கணவர் தலைமறைவானார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

பெங்களூரு: தாவணகெரேவில், திருமணமான 3 மாதத்தில் 1½ மாத கர்ப்பிணி மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது கணவர் தலைமறைவானார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

1½ மாத கர்ப்பிணி

தாவணகெரே மாவட்டம் சன்னகிரி தாலுகா மீயாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதர்(வயது 32). இவருக்கும், ரூபா பாய்(22) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ரூபா 1½ மாத கர்ப்பிணியாக இருந்தார். திருமணத்திற்கு பின்பு ரூபா, தனது கணவர் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார்.

திருமணத்தின்போது கங்காதரின் பெற்றோர் கேட்ட வரதட்சணையை ரூபாவின் பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரூபாவின் பெற்றோர் அவருக்கு 3 கிராம் நகை குறைவாக போட்டுவிட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக கேட்டு ரூபாவை கங்காதரும், அவருடைய மாமனார், மாமியார் மற்றும் குடும்பத்தினரும் வரதட்சணை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

விஷம் குடித்தார்

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரூபா விஷம் குடித்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக சன்னகிரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கங்காதரும், அவரது குடும்பத்தினரும் சேர்த்தனர். பின்னர் 2 நாட்கள் கழித்து நேற்று தான் ரூபா விஷம் குடித்துவிட்டது பற்றி அவரது பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர்.

ஆனால் அவர்கள் வருவதற்குள் ரூபா இறந்து விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரூபாவின் பெற்றோரும், குடும்பத்தினரும் அந்த தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ரூபா கொலை செய்யப்பட்டு விட்டதாக குற்றச்சாட்டு கூறினர்.

கணவர் தலைமறைவு

:பின்னர் அவர்கள் இதுபற்றி சந்தேபென்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரூபாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து ரூபாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சந்தேபென்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரூபா மர்மமான முறையில் இறந்ததாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே ரூபாவின் கணவர் கங்காதர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகிறா


Next Story