தரிகெரே-தொட்டகெரே சாலையில் 10 நாட்கள் வாகனங்கள் செல்ல தடை


தரிகெரே-தொட்டகெரே சாலையில் 10 நாட்கள் வாகனங்கள் செல்ல தடை
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

மழையால் இடிந்த பாலம் சீரமைப்பு பணியால் தரிகெரே-தொட்டகெரே சாலையில் 10 நாட்கள் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக கலெக்டர் ரமேஷ் கூறியுள்ளார்.

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா தொட்டகெரே பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழையில் மேம்பாலம் ஒன்று இடிந்தது. இந்த மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்க இருக்கிறது. இதனால் அந்த பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ரமேஷ் கூறும்போது:-

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா தொட்டகெரே பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கன மழையில் சிதிலமடைந்து காணப்பட்டது. தற்போது அந்த பாலம் முழுவதும் இடிந்து விழும் நிலை உள்ளது. இந்த மேம்பாலத்தை சீரமைக்கும் பணிகளை மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி நேற்று(நேற்று முன்தினம்) இருந்து பணிகள் தொடங்கியது. வருகிற 21-ந் தேதி வரை இந்த பணிகள் நடைபெறும். எனவே தரிகெரே-தொட்டகெரே வழியாக வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு மாற்றாக இரேகெரே, தர்மாபுரா கிராமத்தின் வழியாக செல்லும் சாலையை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். பணிகள் முடிந்ததும் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story