100-வது மன் கி பாத் நிகழ்ச்சி; தமிழக மகளிரின் சாதனைகளை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி


100-வது மன் கி பாத் நிகழ்ச்சி; தமிழக மகளிரின் சாதனைகளை குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி
x

100-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழக மகளிரின் சாதனைகளை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசியுள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி பங்கேற்கும் 100-வது மன் கி பாத் நிகழ்ச்சி இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை மக்கள் கேட்பதற்காக நாடு முழுவதும் 4 லட்சம் இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அவர் இந்தியில் ஆற்றிய உரையானது, 22 இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நாடு முழுவதும் மக்கள் கேட்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதோடு ஆங்கிலம் உள்ளிட்ட 12 வெளிநாட்டு மொழிகளிலும் ஒலிபரப்பானது. இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த மன் கி பாத் நிகழ்ச்சி, மக்கள் கடவுளை வழிபட செல்லும்போது, பிரசாதம் எடுத்து செல்வது போன்றது.

கடவுளின் காலடியில் பிரசாதம் வைப்பது போன்று, மன் கி பாத் நிகழ்ச்சியானது ஜனதா-ஜனார்தன் வடிவில் உள்ள மக்களிடம் உரையாடுவது ஆகும். அது என்னுடைய ஆன்மீக பயணம் போலாகி விட்டது. தனிப்பட்ட நபரிடம் இருந்து கூட்டு நபர்களுக்கான பயணம் அது. என்னிடம் இருந்து நம்முடைய என்பதற்கான பயணமும் அது என்று அவர் பேசியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளில் மகளிருக்கு அதிகாரமளித்தல் பற்றி பலமுறை அவர் பேசியுள்ளார். அவர்களது முயற்சிகளை சமூகத்தின் முன்னே கொண்டு வந்து வெளிக்காட்ட இந்த நிகழ்ச்சி நல்லதொரு தளம் ஆக சேவையாற்றி உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கு சான்றாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமூகத்திற்கு பெரிய அளவில் பங்காற்றிய மக்களின் உழைப்பை பற்றி அவர் குறிப்பிட்டார். இந்நிகழ்ச்சியில் மகளிரின் சாதனைகளை குறிப்பிட்டது மக்கள் பலரிடையே நிறைய பாராட்டுகளை பெற்று உள்ளது என்றும் அவர் பேசியுள்ளார்.

ராணுவம் அல்லது விளையாட்டு உலகம் ஆகட்டும். மகளிரின் சாதனைகளை பற்றி நான் பேசும்போதெல்லாம், அது பாராட்டு பெறுகிறது.

சத்தீஷ்காரின் தியூர் கிராம பெண்கள், சுயஉதவி குழுக்களின் வழியே கிராம சதுக்கங்கள், சாலைகள் மற்றும் கோவில்களை தூய்மைப்படுத்துவதற்கான பிரசாரங்களை மேற்கொண்டனர்.

தமிழக பழங்குடி மகளிரிடம் இருந்தும் எண்ணற்ற ஊக்கங்களை நாடு பெற்று உள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த ஆயிரக்கணக்கான டெரகோட்டா கோப்பைகளை அவர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உள்ளனர்.

தமிழகத்தின் வேலூரில் உள்ள நாகாற்றை மீட்டு கொண்டு வர, 20 ஆயிரம் மகளிர் ஒன்றிணைந்து பணியாற்றி உள்ளனர். அவர்களது முயற்சிகளை சமூகத்தின் முன்னே கொண்டு வந்து வெளிக்காட்ட இந்த நிகழ்ச்சி நல்லதொரு தளம் ஆக சேவையாற்றி உள்ளது என்று அவர் பெருமிதமுடன் குறிப்பிட்டார்.


Next Story