கர்நாடகத்தில் புதிதாக 1,057 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1,057 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடகத்தில் நேற்று 24 ஆயிரத்து 436 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் பெங்களூரு நகரில் 932 பேர், தார்வாரில் 19 பேர், மைசூருவில் 16 பேர், தட்சிண கன்னடாவில் 15 பேர் உள்பட புதிதாக 1,057 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. பெங்களூரு நகரில் மட்டும் வைரஸ் தொற்றுக்கு ஒருவர் இறந்தார். மற்ற 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
இதுவரை 39 லட்சத்து 77 ஆயிரத்து 90 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 40 ஆயிரத்து 81 பேர் உயிரிழந்து உள்ளனர். 984 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 39 லட்சத்து 30 ஆயிரத்து 461 பேர் இதுவரை குணம் அடைந்து உள்ளனர். 6 ஆயிரத்து 506 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 4.24 சதவீதமாக உள்ளது.
Related Tags :
Next Story