வாகனம் மோதி 10-ம் வகுப்பு மாணவி சாவு
சிக்கஜாலாவில் வாகனம் மோதி 10-ம் வகுப்பு மாணவி உயிரிழந்தாள்.
சிக்கஜாலா:-
பெங்களூரு சிக்கஜாலா அருகே உள்ள பாரதிநகர் பகுதியில் வசித்து வருபவர் சுபாஷ் சிங். இவரது மகள் தமன்னா (வயது 16). இந்த சிறுமி தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் மாலையில் எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் டியூசனுக்கு மாணவி தமன்னா சென்றிருந்தார். இரவு 11.30 மணியளவில் டியூசன் முடிந்ததம், அங்கிருந்து வேனில் அவர் வீட்டுக்கு புறப்பட்டார். வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் வேனில் இருந்து இறங்கி தமன்னா வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அதே சாலையில் வந்த ஒரு வாகனம் மாணவி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில், தூக்கி வீசப்பட்ட தமன்னா தலையில் பலத்தகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டாள். தகவல் அறிந்ததும் சிக்கஜாலா போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மாணவி உடலை கைப்பற்றி விசாரித்தனர். மாணவி மீது மோதிய வாகனத்தை பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசார் ஆய்வு நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து சிக்கஜாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து வாகன டிரைவரை தேடிவருகின்றனர்.