11 பிள்ளைகள் இருந்தும் கவனிக்கவில்லை; கருணை கொலை செய்ய கோரும் மூதாட்டி


11 பிள்ளைகள் இருந்தும் கவனிக்கவில்லை;  கருணை கொலை செய்ய கோரும் மூதாட்டி
x

11 பிள்ளைகள் இருந்தும் கவனிக்காததால் கருணை கொலைக்கு மூதாட்டி கோரிக்கை வைத்துள்ளார்.

ஹாவேரி: ஹாவேரி மாவட்டம் ராணிபென்னூர் டவுனை சேர்ந்தவர் புட்டவவ்வா (வயது 78). இவரது கணவர் சில ஆண்டுக்கு முன்பு இறந்துபோனார். இவருக்கு 7 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். புட்டவவ்வா பெயரில் 25 ஏக்கரில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அவரது பிள்ளைகள் 11 பேரும் பங்கு கேட்டு வருகிறார்கள். ஆனால் அவர் பாகம் பிரித்து கொடுக்கவில்லை. இதனால் அவரை யாரும் கவனிப்பதில்லை. மேலும் சாப்பாடு, தங்க இடமும் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. 11 பிள்ளைகள் இருந்தும் தன்னை கவனிக்க யாரும் இல்லையே என மனம் உடைந்த புட்டவவ்வா நேற்று முன்தினம் ஹாவேரி கலெக்டர் அலுவலகம் வந்தார். அவர் கலெக்டரை நேரில் சந்தித்து, சொத்து பங்கு விவகாரத்தில் 11 பிள்ளைகளும் என்னை கவனிப்பதில்லை. இதனால் வாழ்க்கை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறேன்.

எனவே என்னை கருணை கொலை செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுமதிக்க வேண்டும் என்று கூறி கடிதம் வழங்கினார். அவரை கலெக்டர் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்.


Next Story