கர்நாடகத்தில் புதிதாக 11 தொழிற்பேட்டைகள்


கர்நாடகத்தில் புதிதாக 11 தொழிற்பேட்டைகள்
x

கர்நாடகத்தில் புதிதாக 11 தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று மந்திரி அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூருவில் நேற்று உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டையொடடி உலகமயமாக்கல் மற்றும் இந்தியாவுக்கான வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் உயர்கல்வி மற்றும் அறிவியல்-தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வத் நாராயண் கலந்து கொண்டு பேசியதாவது:-

கர்நாடகத்தில் தொழில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு முதலீட்டில் 30 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு சலுகைகள் வழங்கப்படுவது இல்லை. ராமநகரில் மின்சார வாகனம், யாதகரியில் மருந்து உற்பத்தி தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுகின்றன. கர்நாடகத்தில் புதிதாக 11 தொழிற்பேட்டைகள் நிறுவப்படுகின்றன. இதன் மூலம் 9 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் பிற பகுதிகளில் தொழிற்பேட்டைகள் தொடங்கப்படுவதால் வளர்ச்சி பரவலாகும். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் செல்போன்களில் 97 சதவீதம் கர்நாடகத்தில் உற்பத்தி ஆகிறது. அனைத்து தொழில்களுக்கும் ஏற்ற கொள்கைகள் கர்நாடகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அஸ்வத் நாராயண் பேசினார்.


Next Story