மத மாற்ற முயற்சியில் ஈடுபட்ட 12 பேர் கைது


மத மாற்ற முயற்சியில் ஈடுபட்ட 12 பேர் கைது
x

ராம்நகர் அருகே மத மாற்ற முயற்சியில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராமநகர்:

கர்நாடகத்தில் மத மாற்ற தடை சட்டம் அமலில் உள்ளது. இந்த சட்டத்தின் படி மத மாற்ற முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே சிக்கமுதுவாடி தாண்டா கிராமத்தில் வசித்து வரும் மக்கள் சிலரை ஒரு கும்பல் மதமாற்றம் செய்ய முயற்சி செய்வதாகவும், அந்த கும்பலினர் கிராமத்தில் ஒரு வீட்டில் தங்கி இருப்பதாகவும் கனகபுரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்பேரில் சிக்கமுதுவாடி தாண்டா கிராமத்திற்கு சென்ற போலீசார் ஒரு வீட்டில் இருந்த 12 பேர் கும்பலை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மத மாற்ற முயற்சியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது. இதனால் அவர்கள் 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது மத மாற்ற தடை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story