புத்தாண்டு கொண்டாட்டத்தில் நட்சத்திர ஓட்டலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை


புத்தாண்டு கொண்டாட்டத்தில் நட்சத்திர ஓட்டலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை
x

புத்தாண்டை கொண்டாட சிறுமி தனது பெற்றோருடன் தனியார் 5 நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பையில் ஜீஹு நகரில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலில் புத்தாண்ட்டை கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த ஓட்டலுக்கு 12 வயது சிறுமி தனது பெற்றோருடன் வந்திருந்தார். சனிக்கிழமை இரவு முதல் நடன நிகழ்ச்சிகள் ஆட்டம் பாட்டம் என ஓட்டலில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

புத்தாண்டு பிறந்த உடன் அதிகாலை 3 மணியளவில் ஓட்டலில் சிறுமி நடமனாடிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த ஓட்டலுக்கு வந்திருந்த 29 வயது இளைஞன் சிறுமியுடன் சேர்ந்து நடனமாடியுள்ளான். அப்போது அந்த இளைஞன் சிறுமியிடம் தவறாக நடந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

இது குறித்து உடனடியாக அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, ஓட்டல் ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்க சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பிச்செல்ல முயன்ற இளைஞனை ஓட்டல் ஊழியர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர்.

உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலையடுத்து அங்கு விரைந்த போலீசார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை கைது செய்தனர்.


Next Story