தட்சிண கன்னடா, உடுப்பியில் ஹிஜாப் பிரச்சினையால் 145 முஸ்லிம் மாணவிகள் மாற்று சான்றிதழ் வாங்கினர்


தட்சிண கன்னடா, உடுப்பியில்   ஹிஜாப் பிரச்சினையால் 145 முஸ்லிம் மாணவிகள்   மாற்று சான்றிதழ் வாங்கினர்
x

ஹிஜாப் பிரச்சினையால் தட்சிண கன்னடா, உடுப்பியில் 145 முஸ்லிம் மாணவிகள் மாற்று சான்றிதழ் வாங்கியது தெரியவந்துள்ளது.

மங்களூரு: ஹிஜாப் பிரச்சினையால் தட்சிண கன்னடா, உடுப்பியில் 145 முஸ்லிம் மாணவிகள் மாற்று சான்றிதழ் வாங்கியது தெரியவந்துள்ளது.

ஹிஜாப் விவகாரம்

கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. கடலோர மாவட்டமான உடுப்பி குந்தாப்புராவில் உள்ள ஒரு கல்லூரியில் தொடங்கி ஹிஜாப் விவகாரம் மாநிலம் முழுவதும் பரவியது. இதுதொடர்பான மாணவர்கள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. பள்ளி-கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து அரசு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து ஹிஜாப் வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு, பள்ளி-கல்லூரிகளில் மத அடையாள ஆடைகளை அணிய தடைவிதித்து,

ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக அரசின் உத்தரவு செல்லும் என்று உத்தரவிட்டது. ஐகோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து ஹிஜாப் விவகாரம் தணியத்தொடங்கியது. ஆனாலும் ஹிஜாப் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து சில முஸ்லிம் மாணவிகள் வகுப்பு, தேர்வை தொடர்ந்து புறகணித்து வந்தனர். மேலும் முஸ்லிம் மாணவிகள் தாங்கள் படித்து வந்த அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இருந்து மாற்று சான்றிதழை(டி.சி.) வாங்கி வேறு கல்லூரிகளில் சேர்ந்தனர்.

145 முஸ்லிம் மாணவிகள்

இந்த நிலையில் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பியில் ஹிஜாப் பிரச்சினையால் 145 முஸ்லிம் மாணவிகள் மாற்று சான்றிதழை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2 மாவட்டங்களையும் சேர்த்து 900 முஸ்லிம் மாணவிகளில் 145 பேர் மாற்று சான்றிதழ் வாங்கியுள்ளனர். அவர்கள், முஸ்லிம் கல்லூரி உள்ளிட்ட தனியார் கல்லூரிகளில் படிப்பை தொடர இந்த முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இவர்கள், அரசு கல்லூரிகளில் படித்த 34 சதவீதம் பேரும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படித்த 16 சதவீதம் பேரும் ஆவார்கள். இதுபற்றி ஒரு முஸ்லிம் மாணவி கூறியதாவது:-

ஹிஜாப் அணிய அனுமதிக்காததால், மாற்று சான்றிதழை வாங்கியுள்ளோம். இதற்கு காரணம் பள்ளிகல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் தான். அரசியல் சாசன சட்டப்படி எங்களால் கல்வி கற்க முடியவில்லை என்றார்.


Next Story