கர்நாடகத்தில் புதிதாக 1,552 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 1,552 பேருக்கு கொரோனா
x

கர்நாடகத்தில் புதிதாக 1,552 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-கர்நாடகத்தில் இன்று 33 ஆயிரத்து 671 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 1,552 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் பெங்களூரு நகரில் 1,285 பேருக்கும், மைசூருவில் 31 பேருக்கும், பெலகாவியில் 37 பேருக்கும், தார்வாரில் 35 பேருக்கும், கலபுரகியில் 20 பேருக்கும், கோலாரில் 16 பேருக்கும், குடகில் 15 பேருக்கும், பல்லாரியில் 14பேருக்கும், உடுப்பியில் 14 பேருக்கும், பெங்களூரு புறநகரில் 11 பேருக்கும், தட்சிண கன்னடாவில் 9 பேருக்கும், சிக்கமகளூருவில் 8 பேருக்கும், சாம்ராஜ்நகர், உத்தரகன்னடாவில் தலா 7 பேருக்கும், மண்டியாவில் 6 பேருக்கும், பாகல்கோட்டை, பீதர், சித்ரதுர்கா, ராய்ச்சூரில் தலா 3 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ராய்ச்சூரில் கொரோனா பாதித்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஒரே நாளில் 1,384 பேர் குணம் அடைந்தனர். மருத்துவ சிகிச்யைில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 33 ஆகும்.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story