இந்தியாவில் இன்று ஒரேநாளில் 15,754 பேருக்கு கொரோனா பாதிப்பு..!


இந்தியாவில் இன்று ஒரேநாளில் 15,754 பேருக்கு கொரோனா பாதிப்பு..!
x

Image Courtesy: PTI 

இந்தியாவில் ஒரே நாளில் 15,754 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு விவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் ஒரே நாளில் 15,754 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று 12,608 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 15,754 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 15,220 பேர் குணமடைந்ததால் இந்தியாவில் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 4,36,85,535 ஆனது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,01,343 லிருந்து 1,01,830 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்தோர் எண்ணிக்கை 72 ஆக பதிவானது. இந்தநிலையில், ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு மொத்தம் 5 லட்சத்து 27 ஆயிரத்து 253 பேர் இறந்துள்ளனர்.

நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 2,09,27,32,604 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 31,52,882 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.


Next Story