சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட உள்ள 18.8 லட்சம் புதிய வாக்காளர்கள்


சட்டசபை தேர்தலில் ஓட்டுப்போட உள்ள 18.8 லட்சம் புதிய வாக்காளர்கள்
x

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் சார்பில் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணி கடந்த ஆண்டு(2022) நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 18 வயது பூர்த்தி அடைந்த 23.3 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பித்தனர். அதில் தகுதி உடைய 18.8 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருப்பதாக கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வாக்காளர்களின் ஓட்டுகள் முக்கியமானதாகும். அவை தான் சில நேரங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் இந்த தேர்தலில் 18.8 லட்சம் புதிய வாக்காளர்களின் ஓட்டுகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Next Story