மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் செத்தன: காப்பாற்ற முயன்ற விவசாயியும் பலி


மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் செத்தன:  காப்பாற்ற முயன்ற விவசாயியும் பலி
x

மின்சாரம் தாக்கி 2 பசுமாடுகள் செத்தன. காப்பாற்ற முயன்ற விவசாயியும் பலியானார்.

சிக்கமகளூரு: சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா பாலூர் அருகே உள்ள பிலகுலி கிராமத்தைச் சேர்ந்தவர் திம்மப்பா (வயது 50). விவசாயி. இவர் நேற்று அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் தனது 2 பசுமாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது.

இந்த நிலையில் மின்கம்பங்களில் இருந்த மின்கம்பிகள் அறுந்து அருகில் மேய்ந்து கொண்டிருந்த 2 பசுமாடுகள் மீது விழுந்தன. இதில் மாடுகள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து 2 மாடுகளும் செத்தன. அதைக்கண்ட திம்மப்பா மாடுகளை காப்பாற்ற முயன்றார். அப்போது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மூடிகெரே போலீசார் விவசாயியின் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story