கேரள விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பிடிபட்டது
கேரள விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பிடிபட்டது.
மலப்புரம்,
கேரள மாநிலம் கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் சுங்கவரித்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று நடந்த சோதனையில் 2 பயணிகள் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இஸ்மாயில் என்ற பயணியிடம் இருந்து 2.324 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. அவர் குக்கர் மற்றும் ஏர் பிரையர் கருவிகளில் மறைத்து வைத்து தங்கத்தை கடத்தி வந்தார்.
அதேபோல அப்துல் ரவுப் என்ற மற்றொரு பயணியிடம் இருந்து 2.326 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் குக்கர், விசிறி மற்றும் ஜூஸ் கருவிகளில் தங்கத்தை மறைத்து வைத்து கொண்டு வந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 4.650 கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ.2.55 கோடி என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story