இந்து அமைப்பு பிரமுகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து; மா்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


இந்து அமைப்பு பிரமுகர்கள் 2 பேருக்கு கத்திக்குத்து; மா்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x

தாவணகெரேயில் இந்து அமைப்பு பிரமுகர்கள் 2 பேரை கத்தியால் குத்திய மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

சிக்கமகளூரு;


தாவணகெரே (மாவட்டம்) டவுன் பகுதியில் உள்ள மதுகிரி சர்க்கிளில் நேற்றுமுன்தினம் இந்து அமைப்பு பிரமுகர் ஒருவரின் பிறந்த நாள் விழா நடந்தது. இதில் அந்தப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். இந்த நிலையில், பிறந்தநாள் விழாவில் நிட்டுவள்ளி கிராமத்தை சேர்ந்த இந்து அமைப்பு பிரமுகர்கள் 2 பேரை மர்மநபர்கள் கத்தியால் குத்தினர்.

இதில் அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பசவநகர் போலீசார் விரைந்து வந்து கத்திக்குத்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக இந்து அமைப்பு பிரமுகர்களை மர்மநபர்கள் கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதுகுறித்து பசவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story