காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 2 பேர் கைது


காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 2 பேர் கைது
x

கோப்புப்படம்

ஜம்மு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் அங்குள்ள சோபியன் மாவட்டத்தில் ராஷ்ட்ரீயா ரைபீள்ஸ் பட்டாலியன் வீரர்களுடன் சி.ஆர்.பி.எப். வீரர்கள் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவாறு அவர்களுக்கு துப்பு சொல்லிவந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து சாட்டிலைட் செல்போன்கள், ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story