பெங்களூருவில் மேலும் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு


பெங்களூருவில் மேலும் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு
x

பெங்களூருவில் மேலும் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் நகரின் பல பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது. மழையால் பெங்களூரு நகரமே பெரும் பாதிப்பை சந்தித்தது. கடந்த 2 வாரங்களாக மழை பெய்யாமல் இருந்ததால் மக்கள் நிம்மதி அடைந்து இருந்தனர். இந்த நிலையில், பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று கனமழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள். இந்த நிலையில், பெங்களூருவில் மேலும் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் இரவு நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் அடுத்த மாதம் (அக்டோபர்) 2-வது வாரத்தில் இருந்து பெங்களூரு, கடலோர மாவட்டங்கள், மலை பகுதி மாவட்டங்களில் பருவமழை பெய்ய தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


Next Story