பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட மேலும் 2 பேர் சாவு


பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட மேலும் 2 பேர் சாவு
x

பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட மேலும் 2 பேர் பலியானார்கள்.

யாதகிரி: யாதகிரி மாவட்டம் உனசகி தாலுகா கோடேகல் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாராயணபுரா கிராமத்தை சேர்ந்தவர் சரணப்பா. இவரது மனைவி ஹூலியம்மா. தம்பதிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் ஹூலியம்மா தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று சரணப்பாவிடம் சமாதானம் பேச ஹூலியம்மாவின் தந்தை நாகேஷ், ஹூலியம்மாவின் சித்தப்பா சரணப்பா மாலி, சகோதரர் சித்தராமப்பா, முத்தப்பா ஆகியோர் சென்று இருந்தனர். அப்போது அவர்கள் 4 பேர் மீதும் சரணப்பா பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.

இதில் சம்பவ இடத்திலேயே நாகப்பா, சரணப்பா மாலி ஆகியோர் உயிரிழந்தனர். சித்தராமப்பா, முத்தப்பா பலத்த தீக்காயத்துடன் ராய்ச்சூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் சித்தராமப்பாவும், முத்தப்பாவும் இன்று உயிரிழந்தனர்.


Next Story