பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி கொலையில் 2 பேர் கைது கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலம்


பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி கொலையில் 2 பேர் கைது  கள்ளக்காதல் விவகாரத்தில் தீர்த்துக்கட்டியது அம்பலம்
x
தினத்தந்தி 9 Oct 2022 12:15 AM IST (Updated: 9 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராய்ச்சூர் அருகே பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:

ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுர் தாலுகா கோந்தா கிராம பஞ்சாயத்து வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கஜானந்தய்ய சாமி (வயது 55). இவரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் கொலை செய்து இருந்தனர். இதுகுறித்து லிங்கசுகுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கஜானந்தய்ய சாமியை கொலை செய்ததாக கோந்தா கிராமத்தை சேர்ந்த ஷிலவந்தா (வயது 25), ஷிலவந்தா பசவராஜ் (26) ஆகிய 2 பேரை லிங்கசுகுர் போலீசார் கைது செய்து உள்ளனர்.

விசாரணையில் ஷிலவந்தா, ஷிலவந்தா பசவராஜின் தாய்களுடன், கஜானந்தய்ய சாமிக்கு கள்ளக்காதல் இருந்து வந்து உள்ளது. அவர்கள் 2 பேருடன் கஜானந்தய்ய சாமி உல்லாசமாக இருந்து வந்து உள்ளார். இதுபற்றி அறிந்ததும் ஷிலவந்தாவும், ஷிலவந்தா பசவராஜிம் தங்களது தாய்கள் உடனான கள்ளக்காதலை கைவிடும்படி கூறியுள்ளனர். ஆனால் இதற்கு கஜானந்தய்ய சாமி மறுத்ததால் அவரை 2 பேரும் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்து உள்ளது.


Next Story