குகைக்குள் முள்ளம்பன்றியை பிடிக்க சென்ற 2 பேர் மூச்சுத்திணறி சாவு


குகைக்குள் முள்ளம்பன்றியை பிடிக்க சென்ற 2 பேர் மூச்சுத்திணறி சாவு
x
தினத்தந்தி 1 March 2023 12:15 AM IST (Updated: 1 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குகைக்குள் முள்ளம்பன்றியை பிடிக்க சென்ற வேலுரை சேர்ந்த 2 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.

சிக்கமகளூரு:-

தமிழ்நாடு வேலூர் மாவட்டத்்தை சேர்ந்தவர்கள் விஜய் (வயது28) மற்றும் சரத் (26). இவர்கள் 2 பேரும் சிக்கமகளூரு மாவட்டம் பாலூர் அருகே மாலிங்கநாடு கிராமத்தில் உள்ள காபி தோட்டத்தில் குறுமிளகு பறிக்கும் வேலைக்காக வந்தனர். அவர்கள 2 பேரும் அதேப்பகுதியில் தங்கி இருந்தனர். இந்தநிலையில் காலையில் வழக்கம் போல் விஜய், சரத் வேலைக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது வேலைக்கு செல்லும் வழியில் முள்ளம்பன்றி இருந்துள்ளது. அதனை பார்த்த 2 பேரும் முள்ளம்பன்றியை பிடிக்க முயன்றுள்ளனர். முள்ளம்பன்றி அருகில் இருந்த குகைக்குள் புகுந்தது. இதையடுத்து விஜய், சரத் ஆகியோர் முள்ளம்பன்றியை பிடிப்பதற்கு குகையின் முன் பகுதியில் அருகில் கிடந்த செடி, கொடிகளை கொண்டு தீ வைத்து உள்ளனர். இதனால் மறுபுறம் முள்ளம்பன்றி குகைக்குள் இருந்து வெளியே வரும் என அவர்கள் 2 பேரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் முள்ளம் பன்றி வெளியே வரவில்லை. இதனால் விஜய், சரத் ஆகியோர் முள்ளம்பன்றியை பிடிப்பதற்கு குகைக்குள் சென்றனர். அப்போது குகைக்குள் புகைமூட்டம் அதிகமாக இருந்தது. இதில் 2 பேருக்கும் முச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு பொக்லைன் எந்திரம் மூலம் போலீசார் வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் குகையை அகற்றி அவர்கள் 2 பேரின் உடல்களை போலீசார் மீட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக பாலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story