பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது


பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 May 2023 12:15 AM IST (Updated: 29 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் திருட்டு வழக்குகளில் தமிழகத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.9¾ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டன.

ஹெப்பகோடி:

2 பேர் கைது

பெங்களூரு ஹெப்பகோடி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு பின்புறம் சந்தேகப்படும்படியாக 2 பேர் சுற்றி திரிந்தனர். உடனே அவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்த தினேஷ் (வயது 33), சரவணன் (39) என்று தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும், பெங்களூரு மற்றும் பெங்களூரு புறநகர் பகுதிகளில் பூட்டி கிடக்கும் வீடுகளின் கதவை உடைத்து நகை, பணத்தை திருடுவதை 2 பேரும் வழக்கமாக வைத்திருந்தார்கள்.

ரூ.9¾ லட்சம் தங்க நகைகள் மீட்பு

அதுபோல், கடந்த 10-ந் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஹெப்பகோடியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வாக்களிக்க சென்றிருந்தனர். அந்த சந்தர்ப்பத்தில் அவர்களது வீட்டு கதவை உடைத்து விட்டு 2 பேரும் உள்ளே புகுந்திருந்தனர். பின்னர் பீரோவில் இருந்த தங்க நகைகளை திருடி சென்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, தினேஷ், சரவணன் கைது செய்யப்பட்டார்கள். அவர்களிடம் இருந்து ரூ.9¾ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஒரு ஸ்கூட்டர் மீட்கப்பட்டது. கைதான 2 பேர் மீதும் ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story