இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த 2 பேர் கைது


இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இருசக்கர வாகனங்களில் சாகசம் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு:

பெங்களூரு கெங்கேரி போக்குவரத்து போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சாலைகளில் வாலிபர் ஒருவர் ஸ்கூட்டரில் சாகசத்தில் ஈடுபட்டார். இதனால் அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். மேலும் வாகன ஓட்டிகள் ஸ்கூட்டரில் வாலிபர் சாகசத்தில் ஈடுபட்டத்தை தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். அந்த புகாரின் பேரில் கெங்கேரி போலீசார், ஸ்கூட்டரில் சாகசம் செய்த வாலிபரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் ராஜாஜிநகர் போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் சாகசம் செய்தபடி சென்ற வாலிபரை பிடித்து கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவரது பெயர் வீரேஷ் (19) என்பது தெரிந்தது. அவர் தலையில் ஹெல்மெட் அணியாமல், அதிவேகமாக மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்டு இருந்தார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story