தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது


தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Sept 2023 12:15 AM IST (Updated: 10 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

டி.நரசிப்புராவில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மைசூரு

வாகன திருட்டு சம்பவங்கள்

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகாவில் கடந்த சில மாதங்களாக வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீட்டின் முன்பு நிறுத்தி இருக்கும் மோட்டார் சைக்கிள்களை மர்மநபர்களை திருடி சென்று வருகிறார்கள்.

இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் டி.நரசிப்புரா டவுன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள்களை தடுத்தி நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேமடைந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் டி.நரசிப்புரா டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

2 பேர் கைது

விசாரணையில் அவர்கள் மைசூரு டவுன் பகுதியை வாஷிம்கான்(வயது35), ஜக்க உல்லா(50) ஆகியோர் என்பதும், 2 பேரும் டி.நரசிப்புரா தாலுகா உள்பட மைசூரு மாவட்டம் முழுவதும் மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களை திருடி வந்ததும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் வந்தது திருட்டு மோட்டார் சைக்கிள் ஆகும். அவர்கள் வாகனங்களை திருடி உதரி பாகங்களை தனித்தனியாக பிரித்து பழைய இரும்பு கடைகளில் விற்பனை செய்துள்ளனர்.

இதையடுத்து வாஷிம்கான், ஜக்கஉல்லா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள்கள், வாகன உதரிபாகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து டி.நரசிப்புரா டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story