தங்க நகைகளை திருடிய 2 வாலிபர்கள் கைது
வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்த வந்து தங்க நகைகளை திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு மல்லேசுவரம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். அந்த தம்பதி தங்களது வீட்டில் கண்காணிப்பு கேமராவை பொருத்த முடிவு செய்தார்கள். இதற்காக கடந்த மாதம் (அக்டோபர்) 23-ந் தேதி அவர்களது வீட்டுக்கு 2 வாலிபர்கள் வந்திருந்தனர். அவர்கள், தம்பதி வீட்டில் கண்காணிப்பு கேமராவை பொருத்திவிட்டு சென்றிருந்தனர். மறுநாள் தம்பதி பார்க்கையில் படுக்கை அறையில் பீரோவில் இருந்த தங்க நகைகள் திருட்டுப்போய் இருந்தது. இதுகுறித்து மல்லேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், தம்பதி வீட்டில் திருடியதாக கண்காணிப்பு கேமராவை பொருத்த வந்திருந்த 2 வாலிபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராவை பொருத்தும் போது, உரிமையாளர் மசூதிக்கு சென்றிருந்ததால், அந்த சந்தர்ப்பத்தில் 2 பேரும் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டனர். கைதான 2 பேரிடம் இருந்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மீட்கப்பட்டது. அவர்கள் 2 பேர் மீதும் மல்லேசுவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.