மூடா சார்பில் 20 ஆயிரம் வீட்டுமனைகள் விற்பனை


மூடா சார்பில் 20 ஆயிரம் வீட்டுமனைகள் விற்பனை
x

மைசூருவில் மூடா சார்பில் 20 ஆயிரம் வீட்டுமனைகள் விற்பனை செய்யப்பட இருப்பதாக அதன் தலைவர் யசஷ்வினி சோமசேகர் தெரிவித்துள்ளார்.

மைசூரு:-

20 ஆயிரம் வீட்டுமனைகள்

மைசூருவில் நகர வளர்ச்சி வாரியம்(மூடா) செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக யசஷ்வினி சோமசேகர் உள்ளார். நேற்று அவர் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மைசூருவில் ஒரு இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று அனைவருக்கும் ஆசை இருக்கும். தற்போது மூடா சார்பில் மைசூரு புறநகரில் விவசாயிகளிடம் இருந்து நிலங்கள் கையப்படுத்தப்பட்டு உள்ளன. அங்கு வீட்டு மனைகளும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது 20 ஆயிரம் வீட்டு மனைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். இதுதவிர அங்கு வீடுகள் கட்டி மைசூருவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்த வீடு இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வருபவர்களுக்கும் வழங்க முடிவு செய்துள்ளோம்.

சாதனை படைத்தவர்களுக்கு...

இதுவரை வீட்டு மனை கோரி 40 ஆயிரம் மனுக்கள் வந்துள்ளன. அவைகளை பரிசீலித்து அதில் தகுதியான 20 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு வீட்டு மனைகள் வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. கர்நாடக பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும். முறையாக ஒப்புதல் பெறப்பட்டு வீட்டு மனைகள் விற்பனை செய்யப்படும். பல துறைகளில் சாதனைகள் படைத்தவர்களுக்கு முதலில் வீட்டு மனைகள் வழங்கப்படும்.

மைசூருவில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் 2 பகுதிகளில் நெடுஞ்சாலை அமைக்கவும், ஒரு பகுதியில் மேம்பாலம் கட்டவும் முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்தர்ப்பத்தில் மூடா கமிஷனர் நடேஷ், உறூப்பினர் மஞ்சு ஆகியோர் உடன் இருந்தார்கள்.


Next Story