கேரளாவில் கூட்டுறவு வங்கிகளில் அதிகாரிகள் சோதனை: ஹவாலா பணம் மாற்றப்பட்டதாக புகார்

கேரளாவில் கூட்டுறவு வங்கிகளில்  அதிகாரிகள் சோதனை: ஹவாலா பணம் மாற்றப்பட்டதாக புகார்
x
தினத்தந்தி 22 Dec 2016 4:17 AM GMT (Updated: 2016-12-22T09:47:29+05:30)

கேரளாவில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஹவாலா பணம் அதிக அளவில் டெபாசிட் செய்யப்பட்டதாக வந்த புகாரை அடுத்து கேரளாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

திருவனந்தபுரம்,

ரூபாய் வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு நவம்பர் 8 ம் தேதி முதல் நவம்பர் 14 ம் தேதி வரை போலி கணக்குகளை உருவாக்கி  அதிக அளவில் ஹவாலா பணம் டெபாசிட்  செய்யப்பட்டதாக வந்த புகாரையடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.  கண்ணூர், கோழிக்கோடு, திரிச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் அமலாக்கத்துறையினரும், கொல்லம், மணப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சிபிஐ அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story